ஊத்துக்கோட்டையில் புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இதில், பணிபுரியும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2025ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் பதவிக்கு வெற்றி தமிழன், ரமேஷ்குமார் ஆகியோரும், துணைத்தலைவர் பதவிக்கு பிரகாஷ், சுந்தர்ராஜ் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு சீனிவாசன், கவிபாரதி ஆகியோரும் போட்டியிட்டனர். மொத்த வாக்குகள் 180 இதில் 159 வாக்குகள் பதிவானது. இதில், தலைவர் பதவிக்கு 112 வாக்குகள் பெற்று வெற்றி தமிழன் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் பதவிக்கு பிரகாஷ் 79 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு சீனிவாசன் 95 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

முன்னதாக, வழக்கறிஞர்கள் சங்க காப்பாளர் தீனதயாளன், பொருளாளர் விவேக்பாபு, இணைச்செயலாளர் இளங்கோவன், நூலகர் ஸ்ரீ வித்யா, தணிக்கையாளர் ஆல்பர்ட், விளையாட்டு செயலாளர் பால சுப்பிரமணியகுமார், துணைச்செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், செயற்குழு உறுப்பினர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலை தலைமை தேர்தல் அதிகாரிகள் வெஸ்லி, பி.எம்.சாமி, பார்த்திபன் நடத்தினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் தற்போதைய சங்க தலைவர் வேல்முருகன் சான்றிதழ்களை வழங்கினார்.

The post ஊத்துக்கோட்டையில் புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: