அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு

 

கும்பகோணம், டிச. 11: அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி நிர்வாக இயக்குநர் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர். அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி நிர்வாக இயக்குநர் பொன்முடி தலைமையில் நேற்று அனைவரும் எடுத்துக்கொண்டனர். அப்போது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன்.

எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என நிர்வாக இயக்குநர் பொன்முடி வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

The post அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: