தடகள போட்டியில் அழகப்பா அரசு கல்லூரி அணி வெற்றி

காரைக்குடி, டிச.11: அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள், பெண்களுக்கான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி தடகள வீரர்கள் நீளம் தாண்டுதல், 110 மீட்டர் தடை ஓட்டம், சங்கிலி குண்டு எறிதல், 100 மீட்டர் தடை ஓட்டம், மினி மாரத்தான், தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் பதக்கம் பெற்றுள்ளனர்.

மேலும் பெண்களுக்கான ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி பெண்கள் அணி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலட்சுமி, உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.

The post தடகள போட்டியில் அழகப்பா அரசு கல்லூரி அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: