பரமக்குடி,டிச.11: பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மனித உரிமைகள் தினத்தையொட்டி, மாணவ,மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உலகம் முழுவதும் டிச.10ம் தேதி மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக முழுவதும் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் மனித உரிமைகளை காக்க உறுதி மொழி எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில், கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் தலைமையில், மாணவ,மாணவிகள் மனித உரிமைகளை காக்க வேண்டும். சமமாக, சமத்துவத்துடனும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் ரகுபதி உள்ளிட்ட வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post பரமக்குடி அரசு கல்லூரியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி appeared first on Dinakaran.