மேலூர், டிச. 10: மேலூர் அருகே வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு சுமந்து ஊர்வலமாக சென்றனர். மேலூர் அருகே சருகுவலையபட்டியில் உள்ள வீரகாளியம்மன் கோயில் பூத்திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் பால்குடங்களை, மந்தை திடலில் இருந்து சுமந்து கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் கோயிலில் பக்தர்கள் கொண்டுவந்த பாலால் வீர காளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.இதனைத்ெதாடர்ந்து நேற்று மாலை வீரகாளியம்மன் கோயிலில் இருந்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அத்துடன் சருகுவலையபட்டி, மணப்பட்டி, ஒத்தபட்டி, மெய்யப்பன்பட்டி, அண்ணா நகர், அரியூர்பட்டி, சுப்பிரமணியபுரம், மேற்குவளவு, ஒத்தவளவு, லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மந்தை கோயிலில் இருந்து பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
The post மேலூர் அருகே வீர காளியம்மன் கோயில் திருவிழா: பால்குடம் சுமந்த பக்தர்கள் appeared first on Dinakaran.