புதுக்கோட்டை, டிச. 9: புதுக்கோட்டை மாவட்டம் குமரமலை தண்டாயுதபாணி கோவிலுக்கு 8ம் ஆண்டாக பக்தர்கள் நடைபயணமாக நேற்று சென்றனர். குமரமலையான் அறக்கட்டளை சார்பில் இந்த நடைபயணம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகரத்தார் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடிகளுடன் பங்கேற்றனர்.நகரத்தார் திருமண மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நடைபயணத்தின் முடிவில் குமரமலையிலுள்ள தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post குமரமலை தண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் நடைபயணம் appeared first on Dinakaran.