கொரடாச்சேரி அருகே ₹11 லட்சத்தில் கலையரங்கம் திறப்பு

 

நீடாமங்கலம், டிச. 8: கொரடாச்சேரி அருகே ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறக்கப்பட்டது. கொரடாச்சேரி அருகே செல்லூர் உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் ரூ.11 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டு இதனை நேற்று முன்தினம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் திறந்து வைத்தார். இதேபோல் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு நுழைவாயிலையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது பேசிய பூண்டி கலைவாணன் பள்ளி மாணவர்கள் கல்வி மட்டும் இன்றி கலைத்திறமையை கொண்டு வரும் வகையில் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.இதில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் (எ) கலியபெருமாள், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பாலச்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்,

The post கொரடாச்சேரி அருகே ₹11 லட்சத்தில் கலையரங்கம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: