அழகப்பபுரம் பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

அஞ்சுகிராமம், டிச. 8: பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு அழகப்பபுரம் பேரூராட்சியில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட ஏராளமான நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணி நடந்தது. பேரூராட்சி தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் தலைமையில், செயல் அலுவலர் பூதப்பாண்டி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, இளநிலை உதவியாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நிவாரண பொருட்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பிரகாஷ், கிறிஸ்டி, ராணி புஷ்பம், டெரன்சி மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இந்த நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

The post அழகப்பபுரம் பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: