குடியாத்தம், டிச.8: பேரணாம்பட்டு அருகே மைனர் பெண்ணை காதலித்து 6 மாதம் கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் விக்னேஷ்(21), கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். அப்போது, விக்னேஷ் மைனர் பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி பாலியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மைனர் பெண் தற்போது 6 மாதங்கள் கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அந்த பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது விக்னேஷ் தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மைனர் பெண்ணின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள விக்னேஷை வலைவீசி தேடிவருகின்றனர்.
The post மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ வழக்கில் வலை appeared first on Dinakaran.