சேலம், டிச.8: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில், ரத்ததான முகாம் நேற்று அரசு மருத்துவமனையில் நடந்தது. அமைப்பாளர் அருள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாலமுருகன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர செயலாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு, ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் அறிவழகன், மருத்துவர் அணி நிர்வாகிகள் பிரேம்நாத், இளந்தமிழன், கோபிநாத், ஸ்டீபன்ராஜ், அஜித்தா, பாலாஜி ராஜா, பெரியசாமி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திமுக மருத்துவர் அணி சார்பில் சேலத்தில் ரத்ததான முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.