டூவீலர்கள் திருடிய வாலிபர் கைது

 

மதுரை, டிச. 8: மதுரை அருகே எஸ்.ஆலங்குளம் வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்வரன்(34). இவர் தனது குழந்தையை, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். குழந்தைக்கு துணையாக மனைவி இருந்துள்ளார். அவருக்கு உணவு கொண்டுவந்த சதீஸ்வரன், தனது டூவீலரை மருத்துவமனை கேண்டீன் அருகே நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அது திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரில், மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, எஸ்.ஆலங்குளம் அழகர் மலையான் நகரை சேர்ந்த கணேஷ் குமார்(42) என்பவர் டூவீலரை திருடியது தெரியவந்தது.

இதேபோல் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டி(28). மதுரை அரசு மருத்துவமனை டெக்னீசியனான இவர், மருத்துவமனையின் பழைய ஆடிட்டோரியம் முன்பாக தனது டூவீலரை நிறுத்தியிருந்தார். வேலை முடிந்து வந்து பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் ேபரில் மருத்துவமனை காவல் நிலைய போலீசில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே சதீஷ்வரனிடம் டூவீலரை திருடிய கணேஷ்குமார் இந்த டூவீலரையும் திருடிச் செல்வது தெரிந்தது. இதைத்தொடர்ந்து டூவீலர்கள் திருடிய கணேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

The post டூவீலர்கள் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: