ஒட்டன்சத்திரம். டிச. 8: ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பாண்டியன் ஆய்வு செய்தார். ஆய்வில் துணை வேளாண்மை இயக்குநர் (மாநில திட்டம்) காளிமுத்து மற்றும் துணை வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) அமலா ஆகியோர் திட்ட செயலாக்கம், இலக்கீடு மற்றும் சாதனை விபரங்களை விரிவாக ஆய்வு செய்து விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் இடையகோட்டை கிராமத்தில் துவரை பயிரில் அமைக்கப்பட்டுள்ள விதை பண்ணையை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை பயிர் பரப்பு அதிகரிப்பு செயலாக்க திடலையும் பார்வையிட்டார். ஆய்வின் போது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமாலா, வேளாண்மை அலுவலர் நல்லமுத்து ராஜா மற்றும் துணை வேளாண்மை அலுவலர், உதவி விதை அலுவலர், உதவி வேளாண்மை அலுவர்கள் உடனிருந்தனர்.
The post ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் துவரை விதை பண்ணையில் ஆய்வு appeared first on Dinakaran.