தொடரும் சைபர் குற்றங்கள்: புதுவையில் 4 பேரிடம் ₹2.98 லட்சம் மோசடி

புதுச்சேரி, டிச. 7: புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் ராமலிங்கம். இவருக்கு தெரியாமலே, இவரது கிரெடிட் கார்டிலிருந்து மர்ம நபர் ₹2.01 லட்சத்தை எடுத்துள்ளார். மேலும் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கந்தன் என்பவர் இணையதளத்தில், பழைய செல்போன் விற்பனைக்கு உள்ளதா என தேடியுள்ளார். அப்போது கந்தனின் பேஸ்புக்கில் ஒருவர் செல்போன் விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி கந்தன் ₹12 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். குருமாம்பேட் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் பகுதி நேரம் வேலை மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறியதை நம்பி ₹47 ஆயிரத்தை மோசடி கும்பலுக்கு அனுப்பி ஏமாந்துள்ளார்.

காரைக்கால் டவுன் பகுதியை சேர்ந்த முகமது காசிம் என்பவர் ₹38 ஆயிரம் பணத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொடரும் சைபர் குற்றங்கள்: புதுவையில் 4 பேரிடம் ₹2.98 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: