வள்ளியூர் சாமியார்பொத்தையில் முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜையில் கலைநிகழ்ச்சி

வள்ளியூர்,டிச.7: வள்ளியூர் முத்துகிருஷ்ண சுவாமியின் 111வது குருபூஜை மற்றும் குருஜெயந்தி விழா 4-ம் தேதி துவங்கியது. இதனை தொடர்நது 10 நாட்கள் விசேஷ பூஜைகள் கலைநிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவில் நேற்றைய நிகழ்ச்சியாக காஷ்யப் மகேஷின் குரலிசை நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் தொடர்நது மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும் பஜனையும் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பூஜ்ய மாதாஜி வித்தம்மா தலைமையேற்று முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post வள்ளியூர் சாமியார்பொத்தையில் முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜையில் கலைநிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: