இரணியல் அருகே இறந்த முதியவர் அடையாளம் தெரிந்தது

திங்கள்சந்தை, டிச.7: இரணியல் அருகே பரசேரி பஸ் நிறுத்தத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே இறந்தவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வேப்பிலாங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் (65) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவரை கடந்த சில நாளாக காணாமல் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் தகவல் அறிந்து முருகனின் உறவினர்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

The post இரணியல் அருகே இறந்த முதியவர் அடையாளம் தெரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: