விபத்து குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராகளை ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் வாகனம் வருகின்றது என தெரிந்தே சாலையின் குறுக்கே சென்று திடீரென அந்த லாரியின் முன் சக்கரத்தில் தரையில் படுத்து கொண்டார். பின்னர் அந்த வழியாக வந்த லாரி அந்த நபர் உடல் மீது ஏறி, இறங்கிய போது அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.
உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறந்த நபர் யார் என்பது குறித்தும், எதற்காக ஓடும் லாரியின் முன்பு தற்கொலையில் ஈடுபட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் லாரியின் முன்பு நபர் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post போரூரில் ஓடும் லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்: சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலி appeared first on Dinakaran.