பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஜன. 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை 34,087 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9ம் தேதி முதல் 14ம் தேதி வர பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 34,087 பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். 2026ம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை செயலாளர் சுன் சோங்கம் ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், போக்குவரத்துத்துறை ஆணையர் கிரண் குராலா, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) உறுப்பினர் செயலர் ஜெயக்குமார், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசு துறை அலுவலர்கள், தனி அலுவலர், போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்கள் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 9ம் தேதி (வெள்ளி) முதல் 14ம் தேதி வரையில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் என 6 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 22,797 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 11,290 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக வருகிற 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 6,820 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,188 பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,820 என ஆக மொத்தம் 25,008 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.சென்னையில் இருந்து கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (ளிவிஸி) திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து 9ம் தேதி முதல் 14ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம். இதற்காக 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் 9444018898 மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ள நடைமேடை விவரங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே Know your Bus என்ற வசதி மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* அதிக கட்டணமா?
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 18004256151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் விவரம்
பஸ் நிலையம் இயக்கப்படும் பஸ்கள்
1. அ) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் Moffussll பேருந்து நிலையம் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
1. ஆ) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையம் (MTC) வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
2. கோயம்பேடு பேருந்து நிலையம் கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
3. மாதவரம் புதிய பேருந்து நிலையம் பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை
நாள் கிழமை தினசரி
இயங்கும்
நிர்ணய
பஸ்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னை யில் இருந்து சிறப்பு
இயக்கம் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து
9.1.2026 வெள்ளி 2,092 1,050 1,100
10.1.2026 சனி 2,092 1,030 1,550
11.1.2026 ஞாயிறு 2,092 255 505
12.1.2026 திங்கள் 2,092 2,200 2,100
13.1.2026 செவ்வாய் 2,092 2,790 2,960
14.1.2026 புதன் 2,092 2,920 3,075
மொத்தம் 12,552 10,245 11,290
மொத்தம் 12,552 சிறப்பு பஸ்
எண்ணிக்கை 21,535
இயக்கப்படும் பேருந்துகளின்
மொத்த எண்ணிக்கை

Related Stories: