பாபர் மசூதி இடிப்பு தினம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு

 

திருப்பூர், டிச.6: பாபர் மசூதி இடிப்பு தினத்தில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கலவரங்களை தவிர்க்கும் விதமாக இந்தியா முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்,பழைய பஸ் நிலையம்,புதிய பஸ் நிலையம்,மாநகராட்சி அலுவலகம்,அரசு அலுவலகங்கள்,ரயில் நிலையம், நகரின் மைய பகுதியில் இருக்கும் கோவில்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றிக்கு போலீசார் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் உளவு துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.ரயில் நிலையத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதே போல் சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களையும் பிடித்து விசாரித்து அவர்களின் முகவரிகளை சேகரித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பாபர் மசூதி இடிப்பு தினம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: