பேய்குளம், செங்குளம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

சாத்தான்குளம், டிச. 5: பேய்குளம், செங்குளம் பகுதியில் சுகாதார துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சாத்தான்குளம் அருகே சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேய்குளம், செங்குளம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் தலைமையில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள், கொசு புகைமருந்து தெளித்து வீடுகளில் கொசுப் புழுவை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வீடுகளில் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது. காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டதுடன் தெருக்களும் தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும் செங்குளம் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை வெங்கடேஸ்வரபுரம் பஞ். தலைவர் பெரியசாமி தர், செயலாளர் இம்மானுவேல் செய்திருந்தனர்.

The post பேய்குளம், செங்குளம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: