ஜெகன் ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்த அதிகாரி சஸ்பெண்ட்


அமராவதி: ஆந்திராவில் கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு வழக்கில் தற்போதைய முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டபோது குற்றப் புலனாய்வு துறையின் (சிஐடி) இயக்குநராக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு நிதியை தவறாக கையாண்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சஞ்சய் தற்போது ஆந்திர மாநிலத்தின் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு சேவைகள் துறையின் இயக்குநராக உள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு பணியிடை நீக்கத்தைச் சந்திக்கும் நான்காவது மூத்த ஐபிஎஸ் அதிகாரி இவர் ஆவார்.

முன்னதாக, மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவருக்கு எதிராக விஜயவாடாவில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், அவசரமாக கைது செய்தது, துன்புறுத்தலில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டில் டி.ஐ.ஜி. ரேங்க் கொண்ட அதிகாரி உட்பட மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை சந்திரபாபு நாயுடு அரசு செப்டம்பரில் பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

The post ஜெகன் ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்த அதிகாரி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: