பாதல், பொற்கோயிலில் 2 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் சாதாரண உடையில் வாயிற்காவலராக சேவை செய்ய வேண்டும். அதன்படி, பொற்கோயில் வளாக வாயிலில், 2வது நாளாக நேற்று பாதல் கையில் ஈட்டியுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் பாதலை சுற்றி போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பாதலின் மத சேவையை செய்தியாளர்கள் வீடியோ கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். காலை 9.30 மணி அளவில் திடீரென ஒருவர் பாதலுக்கு மிக அருகில் நெருங்கி வந்து, குர்தா பையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்தார்.
இது குறித்து அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் குர்பிரீத் சிங் புல்லர் கூறுகையில், ‘‘துப்பாக்கி சூடு நடத்திய நபர் தேரா பாபா நானக்கில் வசிக்கும் நரேன் சிங் சவுரா. இவர் முன்னாள் காலிஸ்தானி தீவிரவாதி. அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரிப்போம். பொற்கோயிலில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 175 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். கொலை முயற்சிக்குப் பிறகும் பாதல் தனது சேவையை நேற்று தொடர்ந்தார். பாதலை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு குறித்து சிரோமணி அகாலி தள மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா கண்டனம் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பதவி விலக வேண்டுமெனவும் அவர் கூறி உள்ளார். இதே போல அகல் தக்த் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.
* பஞ்சாப் முதல்வர் பகவந்த் கண்டனம்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது எக்ஸ் தளத்தில், ‘‘மிகப்பெரிய துர்சம்பவத்தை பஞ்சாப் போலீசார் தடுத்துள்ளனர். போலீசார் உடனடியாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர். சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இது குறித்து உடனடியாக தீர விசாரித்து அறிக்கை தர போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார். இதே போல டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post அமிர்தசரஸ் பொற்கோயிலில் பரபரப்பு பஞ்சாப் மாஜி துணை முதல்வர் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி: போலீசார் விரைந்து செயல்பட்டதால் உயிர் தப்பினார்; துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் தீவிரவாதி கைது appeared first on Dinakaran.