கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் பேர் வாக்களித்ததில் அதிசயம் எதுவும் இல்லை: மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்


மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் பேர் வாக்களித்தது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி சொக்கலிங்கம் கூறியதாவது: மகாராஷ்டிராவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் சிறிய மாநிலம். மகாராஷ்டிரா பெரிய மாநிலம். ஜார்க்கண்டில் மக்கள் காலையிலேயே வாக்களித்தனர். ஆனால் மகாராஷ்டிராவில் பிற்பகலில்தான் பலரும் வாக்களித்தனர். மகாராஷ்டிராவில் மாலை 5 மணிக்கு மேல் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 6 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. பெரிய மாநிலம் என்பதால் மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. கடைசி ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் வாக்கு சாவடிகளில் 76 லட்சம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்றால், ஒரு வாக்கு சாவடிக்கு சராசரியாக 76 பேர் வாக்களித்தனர் என்றுதான் பொருள். இது சராசரிதான். ஆச்சரியம் எதுவும் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது. அது பற்றி சந்தேகம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்றார்.

The post கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் பேர் வாக்களித்ததில் அதிசயம் எதுவும் இல்லை: மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: