பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.28.50 லட்சத்தில் புதிய வகுப்பறை: பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்

பெரம்பலூர், டிச. 3: பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ.28.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் திறந்துவைத்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.28.50 லட்சம் மதிப்பில் புதிதாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று 2ம் தேதி திங்கட்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்டகல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அய்யாசாமி தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மலர்க்கொடி வரவேற்றார். விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், 2-புதிய வகுப்பறை கட்டிடங்களைத் திறந்துவைத்தார்.

விழாவில் அட்மா தலைவர் ஜெகதீசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தழுதாழை பாஸ்கர், திமுக (மேற்கு) ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரெங்கராஜ், வேப்பந்தட்டை வட்டார கல்வி அலுவலர்கள் அம்சவள்ளி, இளங்கோவன், பெரியம்மாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சரண்யா முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் நடராஜ், ஜான்சி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஐடிகே தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் நடராசன் நன்றி கூறினார்.

The post பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.28.50 லட்சத்தில் புதிய வகுப்பறை: பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: