மார்த்தாண்டம், டிச.3: மார்த்தாண்டம் அருகே பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் நிதி நிறுவன மேலாளர் பலியானார். மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை இரவி புதூர்கடை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். அவரது மகன் னிவாசன் (45). தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி சிந்து னிவாசன் (38). னிவாசன் நேற்று முன்தினம் தனது பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து இரவி புதூர் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் காஞ்சிரக்கோடு பகுதியில் வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த னிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து பலியான னிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சிந்து னிவாசன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அரசு பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (51) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது அரசு பஸ் மோதி நிதி நிறுவன மேலாளர் பலியான சம்பவம் இரவி புதூர்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post மார்த்தாண்டம் அருகே அரசு பஸ் மோதி நிதி நிறுவன மேலாளர் பலி appeared first on Dinakaran.