சென்னை: தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்டி, எம்எஸ், டிஎன்பி ஆகிய படிப்புகளில் 2,294 இடங்கள் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது. அவற்றில் 1,094 இடங்கள் மருத்துவத் துறையில் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 50%எம்பிபிஎஸ் படித்துவிட்டு, அரசுப் பணியில் இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள முதுகலைப் படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 89 இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 8,182 மருத்துவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4139 மருத்துவர்களும் என 12,321 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர்.
அவர்களில் 446 மருத்துவர்கள் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அதில், என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கு 446 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் 223 மருத்துவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் சான்றிதழ்கள் முழுமையாக சமர்ப்பிக்காத 221 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இளநிலையை தொடர் ந்து, முதுகலை மருத்துவப் படிப்பிலும் 46 பேர் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேருவதற்கு போலியாக தூதரக சான்றிதழ்களை அளித்ததாக மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. தற்போது அவர்கள் மீது காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
The post போலி என்ஆர்ஐ சான்றிதழ்; 46 டாக்டர்கள் மீது போலீசில் புகார்: மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு தகவல் appeared first on Dinakaran.