சீர்காழி, டிச.2 :சீர்காழியில் பெஞ்சல் புயலில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததை மின் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட திருக்கோலக்கா, மாரிமுத்து நகர் , விஎம் எஸ் நகர், தியாகராஜ நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 5 இடத்திற்கு மேல் பெஞ்சல் புயல் காரணமாக மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தும் தென்னை மட்டைகள் விழுந்தும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் கொட்டும் மழையிலும் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்து பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கினார்.
The post சீர்காழியில் புயல்காற்றில் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணி appeared first on Dinakaran.