சாத்தூர், டிச.2: மதுரை-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், சாத்தூர் எட்டுர்வட்டம் பகுதியில் செயல்பட்டு வரும், சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுங்கச்சாவடி சட்டத்தின்படி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு குடிநீர், கழிவறை, ஓய்வு அறைகள் போன்ற அடிப்படைத் தேவைகளை சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
ஆனால் சாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும், சுங்கச்சாவடியில் இது போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. குறிப்பாக கழிப்பறை மூடப்பட்டும், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் இல்லாமலும் உள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் அடிக்கடி மழைநீர் தேங்குவதால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாதநிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் சாத்தூர் எட்டுர்வட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சாத்தூர் டோல்கேட்டில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.