அஞ்சுகிராமம், டிச.2: மயிலாடியில் மவுண்ட் லிட்ரா சிபிஎஸ்இ பள்ளியில் வளர்இளம் பருவ மாணவ மாணவியரின் மன ஆராக்கியம் மேம்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் ப்லாமீஸ் ரோட்டரி கிளப்புடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்வினை குமரி சமுகவியல் இயக்கம், சமுக பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டு மைய மருத்துவர் அணி ஏ.எம் அரசு, 9-12 வகுப்பு மாணவர்கள் மத்தியில் மன ஆரோக்கிய மேம்பாட்டு விளையாட்டுகள் நடத்தி நேர்மறை எண்ணம் தோன்றும் புத்தாக்கப் பயிற்சியும் அளித்தார்.
மாணவ மாணவியருக்கு பெற்றோர் ஆசிரியர்களே அவர்களின் நலம் விரும்பிகள் என்பதை விளக்கினார். சுயஒழுக்கம், சுய கட்டுப்பாடு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இறுதியில் ரோட்டரி குழுமத் தலைவர் சௌதாமினி மற்றும் அவரது குழு பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
The post மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளியில் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.