தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மூட்டை மூட்டையாய் குவிக்கப்படும் குப்பைகள்

 

தஞ்சாவூர், நவ. 30: தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மூட்டை மூட்டையாக குப்பைகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதில், உணவகங்கள், பழக்கடைகள், பேன்சி, பூ கடைகள் உள்ளிட்ட கடைகளும், மருந்தகங்கள், மருத்துவமனைகள், சாலையோர கடைகள் ஏராளமாக உள்ளன அதில், தினந்தோறும் உற்பத்தியாகும் கழிவுகளை மூட்டை கட்டி பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் குவிக்கின்றனர்.

இந்த பகுதியைக் கடந்துதான் திருச்சி மற்றும் திருச்சி வழியாக செல்லும் பேருந்துகள் செல்கின்றன. தொடர்மழை காரணமாக குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் கிடப்பதால், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால், வியாபாரம், சுற்றுலா, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் தஞ்சாவூர் வந்து செல்லும் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர் மிகுந்த சிரமமைடகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் குவிந்து கிடக்கும் குப்பை மூட்டைகளை அகற்றி, அந்த பகுதி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து, சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மூட்டை மூட்டையாய் குவிக்கப்படும் குப்பைகள் appeared first on Dinakaran.

Related Stories: