* ஒரு ஓவரில் 28 ரன் ஹர்திக் வெறித்தனம்
புதுடெல்லி: சையத் முஸ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் திரிபுரா – பரோடா அணிகள் மோதின. முதலில் ஆடிய திரிபுரா அணி, 109 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய பரோடா அணி, 11.2 ஓவரில் 110 ரன் குவித்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, 23 பந்துகளில் 47 ரன் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். சுழல் பந்து வீச்சாளர் சுல்தான் வீசிய ஒரு ஓவரில் மட்டும், 6, 0, 6, 6, 4, 6 என வெறித்தனம் காட்டிய ஹர்திக், 28 ரன் குவித்தார்.
* 3வது ஒரு நாள் போட்டி பாக். அபார வெற்றி
புலவயோ: ஜிம்பாப்வே அணியுடனான 3வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி, 99 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்து, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. ஜிம்பாப்வே அணியுடன் நேற்று முன்தினம் நடந்த 3வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய பாக் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வௌிப்படுத்தினர். 50 ஓவர் முடிவில், அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 40.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
* இந்திய கிரிக்கெட் வீரர் சித்தார்த் கவுல் ஓய்வு
புதுடெல்லி: இந்தியாவுக்காக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் (34), இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சித்தார்த் கவுல். இந்தியாவுக்காக, 2018 – 19 ஆண்டுகளில் 3 டி20 மற்றும் 3 ஒரு நாாள் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளராக ஆடியுள்ளார்.
The post துளித்துளியாய்…. appeared first on Dinakaran.