கிருஷ்ணகிரி, நவ.30: கந்திகுப்பம் ராசிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லாவண்யா(25), கடந்த அக்டோபர் 1ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற லாவண்யா, பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி முருகன் கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி சத்திரபதி சிவாஜ் நகரை சேர்ந்த கார்த்திக்(24) என்ற வாலிபருடன், தனது மனைவி அடிக்கடி பேசி வந்தார். இதனால் கார்த்திக் தான், ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.
The post திருமணமான இளம்பெண் கடத்தல் appeared first on Dinakaran.