மதுரை, நவ. 29: அமெரிக்க கண் மருத்துவ சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஆய்வறிக்கைக் கூட்டம் நடத்தப்படுகிறது. தற்போது நடந்த கூட்டத்தில் 2,130 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்ததில், 72 கட்டுரைகள் ஏற்கப்பட்டன. இந்நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் புற்று நோய்க்கு குறைந்த செலவில் நிபுணத்துவமான சிகிச்சை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் உஷா கிம் சமர்ப்பித்திருந்தார். இந்த ஆய்வறிக்கை முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க கண் மருத்துவ சங்கத்தின் உயரிய விருது மதுரை டாக்டருக்கு வழங்கப்பட்டது. இதற்கு மருத்துவத்துறையின் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
The post மதுரை டாக்டருக்கு அமெரிக்க விருது appeared first on Dinakaran.