ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்திய வீரர்கள் சந்திப்பு: 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் லெவன் அணியுடன் மோதல்

சிட்னி: ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து உரையாடினர். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்கவுள்ளது.

இதனால், பிங்க் நிற பந்தில் விளையாடவுள்ளனர். இதற்கு முன்னதாக பிங்க் நிற பந்திலான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணியுடன் இந்தியா மோதுகிறது. 30, 1ம் தேதிகளில் இப்போட்டி நடக்கும் நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று சந்தித்தனர். ஆஸ்திரேலியா நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இச்சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். இந்திய வீரர்களிடம் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் உரையாடினார். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, பும்ரா உள்ளிட்டோரிடம் வெகுநேரம் பேசினார். பின்னர், ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீசுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

The post ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்திய வீரர்கள் சந்திப்பு: 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் லெவன் அணியுடன் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: