ஆசிய கோப்பை வென்ற பாக். வீரர்களுக்கு ரூ.1 கோடி

கராச்சி: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், வெற்றி பெற்ற பாக். அணிக்கு அந்நாட்டு கரன்சி மதிப்பில், ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என, பாக். பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அறிவித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில், பாக் இளம் வீரர்களுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியின்போது, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Related Stories: