குறிப்பாக தொழில்நுட்பம் என்று வந்துவிட்டால் மூத்த குடிமக்கள் மற்றவர்களை நாடியே இருக்கிறார்கள், எனவே அதிக கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் இ-மெயில்கள் மற்றும் அழைப்புகளை தவிர்ப்பது நல்லது. இணைய வழி திருடர்கள், விழா காலங்களில் அதிகமாக செயல்படுவார்கள். குறிப்பாக தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் விதவிதமான வாழ்த்துக்கள் மூலமாகவும் அல்லது பரிசு பொருட்கள் வென்று விட்டதாகவும் கூறி லிங்க் அனுப்புவார்கள் அதை தெரியாமல் அழுத்தினால் நம்முடைய மொபைலில் உள்ள தகவல்கள் அவர்களுக்கு சென்று விடும். எனவே இதுபோன்று செயல்களில் மக்கள் ஈடுபடக் கூடாது. இணையவழி திருடர்கள் மூலம் பிரச்னை வந்தால் 1930 என்று எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.
The post மூத்த குடிமக்கள் கவனமாக இருக்க வேண்டும் விழா காலங்களில் இணையவழி மோசடி அதிகளவில் நடக்கிறது: வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் பேச்சு appeared first on Dinakaran.