சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் உத்தரவின் பேரில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், எதிரிகள் மேற்படி வங்கியை ஏமாற்றும் நோக்கில் V Tech Park என்ற நிறுவனத்தை பெயரளவில் போலியாக துவக்கியும், போலியான மதிப்பீட்டு ஆவணங்களை (quotation) தயாரித்தும், அதை வங்கியில் சமர்பித்து தொழில் கடனாக ரூ.2.30 கோடி பெற்று வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது தெரியவருகிறது.
அதன்பேரில், மேற்படி மோசடியில் ஈடுபட்ட C.N.ரமேஷ், ஆ/வ-57, த/பெ.நீலகண்டன், எண். 02/691. 2வது மெயின் ரோடு. ரங்காரெட்டி கார்டன். நீலாங்கரை, சென்னை என்பவரை நேற்று (26.11.2024) கைது செய்து கனம் கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி மோசடி நபரை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு, காவல் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்கள்.
The post இந்தியன் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்பித்து தொழில் கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது appeared first on Dinakaran.