போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 2வது வாரத்திற்குள் பேச்சு: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு முழுமையாக ஓய்வுகால பலனை வழங்க வேண்டும், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, ஒப்பந்த முறையில் பணியாளர் நியமனம் போன்றவற்றை கைவிட வேண்டும், போக்குவரத்து கழகங்களின் நிதிப்பிரச்சனைக்குத் தீர்வுகாண வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து போக்குவரத்து செயலாளர், கோரிக்கைளை அரசிடம் எடுத்து சென்று உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார். மேலும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை டிசம்பர் 2வது வாரத்திற்குள் நடத்த ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

The post போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 2வது வாரத்திற்குள் பேச்சு: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: