வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கார்த்திகை பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, இன்று (நவ. 28) முதல் டிச. 1ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்து. தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக அனுமதிக்கப்பட்ட 4 நாட்களும் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
The post தொடர் மழையால் சதுரகிரி செல்ல 4 நாட்கள் தடை appeared first on Dinakaran.