சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., இலவச லேப்டாப் வழங்கப்படுவதாக விளம்பரம் ஒன்று சமூகவலைதளங்களிலும், இணையதளங்களிலும் பரவி வருகிறது. இதுதொடர்பாக, ஏ.ஐ.சி.டி.இ., கவனத்துக் கொண்டுவரப்பட்டது. இலவச லேப்டாப் விளம்பரம் முற்றிலும் தவறானது. இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் எதையும் தொடங்க வில்லை. மாணவர்களும், கல்வி நிறுவனங்களும், பொது மக்களும் இந்த போலியான தகவலை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். இந்த போலியான தகவலுக்கு, யாரும் தங்களின் சுய விவரங்களை வழங்கவோ, கட்டணங்களை செலுத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்கள் ஏ.ஐ.சி.டி.இ.,யின் சலுகைகள், திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், சமூக வலை கணக்குகளிலும் அறிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இலவச லேப்டாப் வழங்குவதாக பரவி வரும் செய்தி தவறானது: ஏஐசிடிஇ விளக்கம் appeared first on Dinakaran.