மதுரையிலிருந்து சென்னைக்கு 25,000 லிட்டர் ஆவின் பால்

மதுரை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் பால் வரவழைக்கப்பட்டு சென்னையில் 24 மணி நேரம் ஆவின் பால் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படுகிறது. மதுரை ஆவின் பொதுமேலாளர் சிவகாமி கூறுகையில், ‘‘சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலின் தேவையும் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு ஆவின் உற்பத்தியாளர்கள் தேவையை கருதி பால் உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர். தற்போது, சென்னைக்கு மதுரை ஆவினில் இருந்து 25 ஆயிரம் லிட்டர் பால் அரை லிட்டர் பாக்கெட்களாக அனுப்பப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் அடுத்தடுத்து வழங்கவும் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

The post மதுரையிலிருந்து சென்னைக்கு 25,000 லிட்டர் ஆவின் பால் appeared first on Dinakaran.

Related Stories: