தாராபுரம், நவ.27: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு குளத்துப்பாளையம், வீராச்சிமங்கலம், அலங்கியம், தாராபுரம் ராஜவாய்க்கால் உள்ளிட்ட பாசன கால்வாய்களின் வழியாக ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம் .கடந்த 13ம் தேதி அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தாராபுரம் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ராஜவாய்க்கால் பாசன கால்வாய்க்கு திறந்து விடப்பட்ட தண்ணீரால் தெற்கு பனங்காடு பகுதியில் பாசன கால்வாய் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டு கரையின் மறுபுறத்திற்கு விவசாயிகள் செல்ல முடியாத சிரமமான நிலை ஏற்பட்டது,
இதுகுறித்து கடந்த 15ம் தேதி தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது, இதன் எதிரொலியாக வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட பாசன கால்வாய் பாலத்தை திமுக ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில் குமார், கண்ணன், மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் உள்ளிட்டோருடன் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது, பாலத்தை புதிதாக கட்டித் தர தாராபுரம் ஊராட்சி ஒன்றிய நிதிகளில் இருந்து தொகை ஒதுக்கீடு செய்து புதிதாக கட்டித் தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், உடைந்தை பாலம் குறித்து பொதுப்பணித் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
The post தாராபுரத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராஜாவாய்க்கால் கால்வாய் பாலம் விரைவில் சீரமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.