போச்சம்பள்ளி, நவ.27: கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நீரை பயன்படுத்தி காவேரிப்பட்டணம், நெடுங்கல், மலையாண்டஅள்ளி, கொட்டவூர், பேரூஅள்ளி, அகரம், பாரூர், பண்ணந்தூர், அரசம்பட்டி, மஞ்சமேடு, புலியூர், தாதம்பட்டி, பாளேத்தோட்டம், போச்சம்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு நெல் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து போச்சம்பள்ளி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போச்சம்பள்ளியில், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், திங்கட்கிழமை அன்று நெல் ஏலம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் நெல்ரகங்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும் ஏலத்தில் கலந்துகொண்டு பயடையலாம். ஏலத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும். ( இ=நாம்) முறையில் கொள்முதல் தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
The post ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் ஏலம் appeared first on Dinakaran.