பாமகவினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்ட பாமக சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்எல்ஏ தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ வரவேற்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர். செந்தில், பாரிமோகன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாவட்ட தலைவர்கள் செல்வகுமார், அல்லிமுத்து, மாநில துணை தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடி செல்வம், மாநில இளைஞர் சங்க செயலாளர்கள் முருகசாமி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் செல்வகுமார், மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலயோகி, பசுமைத் தாயக இணை செயலாளர் சங்கர் ஆகியோர் பேசினர். அப்போது தடையைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பாமகவினரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 எம்எல்ஏக்கள் மற்றும் 12 பெண்கள் உள்பட 253 பேர் கைது செய்யப்பட்டனர். இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post பாமகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: