சென்னை: நாடாளுமன்ற விவாதங்களை 22 இந்திய மொழிகளில் நிகழ்நேரத்தில் மொழிபெயர்த்து யூடியூப்பில் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடி பிரவர்த்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, மனித ஆற்றலை மேம்படுத்தும் வகையில் மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்ற விவாதங்களை 22 இந்திய மொழிகளில் நிகழ்நேரத்தில் மொழிபெயர்த்து யூடியூப்பில் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி, மனிதனை மையபடுத்தும் செயற்கை நுண்ணறிவு மையத்தின் தலைமை விஞ்ஞானி கவுரவ் ரெய்னா கூறுகையில், சன்சாத் டிவி மூலம் இந்த மொழிபெயர்ப்பிற்கான பணியைத் தொடங்கினோம்.
குரல் உரையாக மாற்றப்படும், மேலும் உரை மொழிபெயர்க்கப்பட்டு மீண்டும் குரலாக மாற்றப்படும்.‘‘இது மிகவும் சிக்கலான பிரச்னை, சிறிய இலக்குகளை அடைய முயற்சிக்கிறோம். இந்த மையம் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவை சட்ட அமைப்புகளுக்கும் பயன்படுத்த முயற்சிக்கிறது. நாங்கள் இந்த திட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் உத்தரவுகளில் கொண்டு வர முயற்சிக்கிறோம். இதனால் அனைத்து மொழிகளிலும் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும். ஆவணச் சரிபார்ப்பு செயல்முறைக்கும் ஆட்டோமேஷனை திட்டத்தை அறிமுகப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதனை தொடர்ந்து, உயர் நீதிமன்றங்கள் மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கும் இதனை விரிவுபடுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post நாடாளுமன்ற விவாதங்களை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் சென்னை ஐஐடி appeared first on Dinakaran.