மறு தேர்தல் நடத்த வேணும்!: சிவசேனா எம்பி வலியுறுத்தல்

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 288 இடங்களில் 230 இடங்களை கைப்பற்றி மீண்டும் அமைக்கிறது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனா கட்சி போட்டியிட்ட 95 இடங்களில் 20ல் மட்டுமே வென்றது. இந்நிலையில், உத்தவ் சிவசேனா மூத்த எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‘மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இந்திரங்கள் செயலிழந்ததாக கூறப்பட்டன.

மின்னணு இந்திரங்கள் மூலம் முறகேடுகள் நடந்துள்ளது. இந்த தேர்தல்கள் நியாயமாக நடந்ததாக எப்படி கூற முடியும்?. எனவே, தேர்தல் முடிவுகளை ஒதுக்கிவிட்டு வாக்கு சீட்டுகள் மூலம் மறுதேர்தலை மீண்டும் நடத்தவேண்டும். இந்த தேர்தலில் மகாவிகாஸ் அகாடிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தனி ஒருவர் மட்டும் காரணம் இல்லை. எங்கள் கூட்டணிக்குள் வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்றாலும், தோல்விக்கு கூட்டு பொறுப்பேற்கிறோம்’ என்றார்.

The post மறு தேர்தல் நடத்த வேணும்!: சிவசேனா எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: