எங்களது பொதுத்துறை நிறுவனங்கள் லஞ்சம் பெற வேண்டிய அவசியம் கிடையாது. எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது. எந்த சாவு நடந்தாலும் அது குறித்து கருத்து கூறுவதும் குற்றச்சாட்டு கூறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். காவலர்களால் துன்புறுத்தப்பட்டு எந்த ஒரு இறப்பும் எங்களது ஆட்சியில் ஏற்படவில்லை. ஆனால் அவர்களது ஆட்சியில் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது பேசி வருகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகமாக உள்ளது. கழுதை தேய்ந்து கட்டெரும்பாக ஆகிவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் அதிமுக கூட்டங்களில் சலசலப்பு நடந்துள்ளது.
போதை பொருள் நடமாட்டம் எங்கிருந்து வருகிறது என்பதை பார்க்க வேண்டும். குஜராத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் முத்ரா துறைமுகத்திலிருந்து தான் வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டியது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசைவிட்டு தமிழ்நாடு அரசு மீது பழி போடுவது வீண் குற்றச்சாட்டு. எங்களை பொறுத்தவரை அதிக அளவிற்கு போதை பொருட்களை கைப்பற்றி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக உள்ளது.
மற்ற மாநிலங்களுக்கு தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்து பதில் சொன்னால் சரியாக இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று கூறுவது வேறு. அதிக பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று கூறுவது வேறு. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது. ஆசிரியர் கொலை, மருத்துவர் மீது தாக்குதல் உள்ளிட்டவைகள் தனிப்பட்ட பிரச்னைகளால் தான் நடந்துள்ளது. இருந்தாலும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ நிச்சயமாக தமிழ்நாடு அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தூத்துக்குடியில் நடந்ததையெல்லாம் மறந்துவிட்டார் எது நடந்தாலும் குற்றச்சாட்டு கூறுவதே எடப்பாடிக்கு வழக்கம்: அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு appeared first on Dinakaran.