மகாராஷ்டிரா தேர்தலில் 6 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பதில் சந்தேகம்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எங்களது அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 4லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கின்றார். கர்நாடகா மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கின்றது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது.

முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி ஒரு தகவலை சொல்லி இருக்கிறார். வேலட் பேப்பரை சரியாக கணக்கெடுத்தாலே தேர்தல் வாக்கு சதவீதம் தெரிந்து விடும். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து 6 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளதாக தெரிவித்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இதுகுறித்து ஆய்வு செய்து பத்திரிகையாளர்கள் மத்தியில் உண்மை நிலவரம் தெரிவிக்கப்படும். அதானியின் பெரும் பலம் மற்றும் மதவாத பிளவு சக்தி என எதை எல்லாம் கையாள முடியுமோ அதை எல்லாம் பாஜக மகாராஷ்டிரா தேர்தலில் கையாண்டு இருக்கின்றது.

பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ரூ.15 லட்சம் தருவேன் என்றார்கள், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பேன் என்றார்கள். எதையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா?. இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவோம் என்று தெரிவித்தார்கள். ஆனால் அப்படி மாற்றினார்களா? பாஜக சொல்லாத ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்கள். அது அதானியை பெரும் பணக்காரர் ஆக்கியது தான். எல்லா பொதுத் துறை நிறுவனங்களையும் கப்பல், மின்சாரம் என அனைத்தையும் அதானிக்கு கொடுப்பது தான் அவர்கள் நிறைவேற்றியுள்ள வாக்குறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

The post மகாராஷ்டிரா தேர்தலில் 6 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பதில் சந்தேகம்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: