சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்படுபவர்கள் பெற்றோர் சங்கம் மற்றும் தலைமையாசிரியர் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டிய தற்காலிக ஆசிரியர்கள் முன்னதாகவே பணியில் இருந்து விடுவிக்கப்படுவதால் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த ஆண்டு BT / BRTE பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களில் இருந்தே, காலியாக உள்ள 5,154 பணியிடங்களுக்கும் முழுமையாக நிரப்பிட வேண்டும். இதுவரை தேர்வு நடத்திடாத மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கும் உடனடியாக தேர்வு நடத்தி காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்: எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.