உணவருந்திய அனைவரும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததையடுத்து நிதி நிறுவனத்தில் இருந்த ₹1.82 லட்சம் ரொக்கப்பணத்தை ரகுபதி திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். பின்னர் மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த பிறகே மேலாளர், ஊழியர்கள் அனைவருக்கும் தெரியவந்தது. இதுகுறித்து இந்த நிதி நிறுவனத்தின் மேலாளர் கார்த்திக் கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் திருடிய நபரை விரைந்து கைது செய்யும்படி கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டார். அதன்படி டிஎஸ்பி தேவராஜ் மேற்பார்வையில் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், சிறப்பு உதவி ஆய்வாளர் வினய்ஆனந்த் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில் நிதி நிறுவனத்தில் பணம் திருடிய ரகுபதி பெங்களூரு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுபதியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ₹1.60 லட்சம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post கள்ளக்குறிச்சி தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ₹1.82 லட்சம் திருடிய சக ஊழியர் கைது appeared first on Dinakaran.