ரூ.1.47 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர் கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி லலிதா (43). இவர் குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனத்திடம் அளித்த புகாரில், குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஏசு ராஜசேகரன் என்பவர், எனது மகனுக்கும், எனது உறவினர்கள் சிலருக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மொத்தம் 37 பேரிடம், ரூ.1 கோடியே 47 லட்சம் வரை வசூலித்து விட்டு மோசடி செய்து உள்ளார். இதுகுறித்து சாத்தான்குளத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள ஏசு ராஜசேகரனிடம் கேட்ட போது எங்களை மிரட்டுகிறார்’ என கூறி இருந்தார்.

இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன், அவரது மனைவி கனக துர்கா ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக போலீஸ் டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தேனியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

The post ரூ.1.47 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: